1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Caston)
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:55 IST)

அரவிந்த் சாமிக்குப் பதிலாக எஸ்.ஜே.சூர்யா

அரவிந்த் சாமிக்குப் பதிலாக எஸ்.ஜே.சூர்யா

‘போகன்’ தெலுங்கு ரீமேக்கில், அரவிந்த் சாமி கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கலாம் என்கிறார்கள்.


 
 
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. தமிழில் வெற்றிபெற்ற இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்க, ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார்.
 
அரவிந்த் சாமி கேரக்டரில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள் படக்குழுவினர். தெலுங்குக்காக, கதையின் இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஸ்பைடர்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தற்போது அஸ்வின் சரவணகுமார் இயக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.