இன்னும் இரண்டு நாட்களில் சிம்புவின் அடுத்த பரிமாணம்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:49 IST)
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருபவர் நடிகர் சிம்பு.

 
 
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாக AAA படம் படுதோல்வி அடைந்ததையும், சிம்புவின் உலட எடை அதிகரித்தது பற்றியும் பல விமர்சனங்கள் வெளியாகியது.
 
ஆனால், சிம்பு தனது உடல் எடையை குறைத்து தனது புதிய தோற்றத்தை வெளிபடுத்தி, அதோடு சேர்த்து தனது அடுத்த இரண்டு படங்களில் அறிவிப்பையும் வெளியிட்டு விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார். 
 
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்நிலையில் சிம்புவின் ரசிகர்ளுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. 
 
அது என்னவெனில் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் `சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் சிம்பு இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். 
 
இந்த படத்தில் இருந்து `கலக்கு மச்சான்’ என துவங்கும் சிங்கிள் டிராக் ஒன்று வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :