1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:38 IST)

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் சற்று முன் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு இசை உலகிற்கு மாபெரும் இழப்பு என திரையுலகினர் கருத்து கூறி வருகின்றனர் 
 
 
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
எஸ்பிபி உடல்நிலை நேற்று கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சரியாக இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்பிபி காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எஸ்பிபி காலமானதை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் தனது குறிப்பிட்டுள்ளார்.