விஜய்சேதுபதிக்கு பதிலாக சிம்பு நடிக்கும் படம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது பல மொழிப் படங்களில் பிஷியாக உள்ளதால் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட படத்தில் இவருக்குப் பதிலாக சிம்பு நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது, லாபம், சந்தோஷ் சிவனின் மாநகரம் படம் இந்தி ரீமேக் உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் கோகுள் கோகுள் இயக்கிய, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தின் 2 வது பாகமாக கொரொனாகுமார் என்ற படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும் இதில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.தற்போது, விஜய்சேதுபதியின் கால்ஷீட் பிரச்சனையால் இப்பாத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்சை அடைந்துள்ளனர்,