வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:06 IST)

விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறை ஜோடி சேரும் நடிகை!

நடிகர் விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா மூன்றாவது முறையாக ஒரு வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர்.

சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 மிக சுமாராகவே இருந்தாலும் ஈழத்தமிழர் அமைப்புகள் பற்றிய மோசமானப் பார்வைக்காக சர்ச்சையைக் கிளப்பி ஓரளவு பார்வையாளர்களை ஈர்த்தது. அதே போல அந்த சீரிஸின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதற்கான சில விஷயங்களையும் காட்டி இருந்ததனர். இந்நிலையில் இப்போது அவர் தீவிரவாதியாக அந்த தொடரில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. சீசன் 3 கதைக்களம் நாகலாந்தில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே இவர் விஜய் சேதுபதியுடன் சங்க தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.