வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? பின்னணியில் பிரபல ஓடிடியா?
வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள காலத்துக்கும் நீ வேணும் என்கிற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் திட்டமிட்ட “VTK” செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளிப்போனதற்கும் காரணம் அமேசான் ப்ரைம் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விருமன் படத்தையும் ப்ரைம் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது. இதனால் ரிலீஸுக்குப் பின் இரு படங்களும் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸாவதை தடுப்பதற்காக ரிலீஸ் தேதியை மாற்ற அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.