1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (08:00 IST)

சிம்புவின் ‘பத்து தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

pathu thala
சிம்பு நடித்த மஹா மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படமான ‘பத்து தல’  என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிம்பு நடிப்பில் கிருஷ்ணா என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’ இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சிம்பு அமெரிக்காவிலிருந்து திரும்பிய உடன் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் ‘பத்து தல’  திரைப்படம் வரும் டிசம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
 
 இதனை அடுத்து இந்த ஆண்டு ’மஹா’, ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்து தல’ ஆகிய மூன்று சிம்புவின் திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது