வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (10:40 IST)

10 கோடி சம்பளம்… லாபத்தில் பங்கு – மீண்டும் வேலையைக் காட்டிய சிம்பு!

சுசீந்தரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளராக இப்போது வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதலில் இந்த படத்தை சிம்புவின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. அதை வைத்து மாநாடு தயாரிப்பாளரிடம் இருந்து சிம்பு என் ஓ சி சான்றிதழும் வாங்கினார். ஆனால் இப்போது சிம்பு படத்தை தயாரிக்கவில்லை என சொல்லபடுகிறது. வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்க சிம்புவுக்கு 10 கோடி சம்பளமும் லாபத்தில் பங்கும் தரப்படும் என சொல்லப்படுகிறது.

சிம்பு படத்தில் ஏது லாபம் என நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.