திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (10:26 IST)

சிம்பு காதலைப் பற்றி டி ராஜேந்தரிடம் கேள்வி – மழுப்பலான பதில்!

நடிகர் சிம்பு அந்த நடிகையைக் காதலிக்கிறாராமே என டி ராஜேந்தரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகர் சிம்பு என்றால் சர்ச்சை. சர்ச்சை என்றால் சிம்பு என்பதுதான் கோடம்பாக்கத்தின் தாரக மந்திரம். அந்த அளவுக்கு காதல் சர்ச்சைகள் மற்றும் படப்பிடிப்பு சர்ச்சைகள் எனப் பலவற்றிலும் சிக்கி வருபவர். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் எந்த சர்ச்சைகளும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விநியோகஸ்தர்கள் சங்க பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவரிடம் சிம்பு ’அந்த ‘ நடிகையைக் காதலிக்கிறாராமே என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர் கேட்க அதற்கு டி ராஜேந்தர் இல்லை என்றோ ஆமாம் என்றோ பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். இதனால் சிம்புவின் அந்த நடிகை மீது காதல் உண்மைதானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.