சிம்பு இன்னும் லேட்டா வருகிறாரா...? அறிக்கை வெளியிட்டு விளாசிய தயாரிப்பாளர்!
நடிகர் சிம்புவுக்கு தற்போது தமிழக அளவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்குவதை தவிர்த்து வந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலே இருப்பது, படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த சொல்வது என தொடர்ந்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
இதற்கெல்லாம் முற்றி புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு ஒழுங்காக கோப்ரேட் செய்து வரும் நிலையில் தொடர்ந்து சிம்பு படப்பிடிப்பிற்கு தாமதமாக வருகிறார். இரண்டு கேரவன் கேட்கிறார். ஷூட்டிங்கில் சொகுசாக இருக்க நினைக்கிறார் என்றெல்லாம் குற்றசாட்டுகள் வெளிவருகிறது. இதனால் மாநாடு உண்மையில் திரைக்கு வருமா என்ற சந்தேகத்தில் சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கினர்.
தற்போது இந்த வதந்திகளுக்களெல்லாம் முற்று புள்ளி வைக்கும் விதத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூடியுள்ளதாவது, இதுவரை ஆறு நாட்கள்தான் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த ஆறு நாளில் ஒருநாள் கூட சிம்பு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வரவில்லை. காட்சி படமாக்கி முடியும் வரை கேரவனுக்கும் செல்வதில்லை. அங்கேயே குடையைப் பிடித்து நின்றுகொண்டு நடித்துக் கொடுக்கிறார். அப்படியிருக்கும்போது ரெண்டு கேரவன் கேட்கிறார், இன்னும் தாமதமாக வருகிறார் என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள்.
சொந்தக் காசை வைத்து நாங்கள் படம் பண்ணவில்லை. வட்டிக்கு பணம் வாங்கிப் படம் எடுக்கிறோம். அப்படியிருக்கையில் ஒவ்வொரு தவறான செய்தியும் பணம் தருபவர்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது. சிம்பு குறித்த தவறான கருத்துக்களை உங்கள் மனதில் இருந்து கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் பட்டனை அழுத்துங்கள். இனி இப்படி ஒரு தவறான செய்திகளை பரப்பி எங்களை நெருக்கடிக்கு உள்ளாகாதீர்கள் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.