செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2020 (08:14 IST)

விஜய் இல்லன்னா சிம்பு – ரூட்டை மாற்றிய சுதா கொங்கரா !

சிம்பு மற்றும் விஜய்

விஜய்க்கு சொன்ன கதையில் முதலில் அவர் நடிப்பதாக சொன்னாலும் இப்போது தயங்குவதால் அதே கதையை சிம்புவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளாராம் சுதா கொங்கரா.

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் திரைப்படம் இப்போது ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாக வுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த இயக்குனர்கள் பட்டியலில் சுதா கொங்கரா மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியவர்களின் பெயர்கள் இடம்பெற்று வந்தன. ஆனால் எதுவும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில் இப்போது விஜய், தனது மெஹா ஹிட் படமான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தர்பார் படத்தின் தோல்வியை அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் முருகதாஸ் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது.

இதனால் தன் கதையை சிம்புவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளாராம் சுதா கொங்கரா. மாநாடு படம் முடித்ததும் இந்த படத்தில் நடிக்க சிம்பு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சிம்புவின் நண்பரான யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.