1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (16:38 IST)

தட்றோம் தூக்றோம் - டீமானிடைசேஷன் கீதம்; தெறிக்கவிடும் சிம்பு பாடல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்கும் வகையில் நடிகர் சிம்பு பாடியுள்ள டீமனிடைசேஷன் கீதம் தற்போது வைரலாகி வருகிறது.


 

 
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மொத்த இந்தியாவும் அதிர்ந்து போனது. தினசரி புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவிக்கப்பட்டது நாட்டு மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது.
 
நேற்று நாடு முழுவதும் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தட்றோம் துக்றோம் என்ற டீமானிடைசேஷன் கீதம் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். பாலமுரளி பாலு என்பவர் இசையமைத்துள்ளார். நடிகர் சிம்பு இந்த படலை பாடியுள்ளார்.
 
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்சனைகளை விவரிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது.
 

நன்றி: Trend Music