வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (18:01 IST)

சிம்புவைச் சந்தித்த ‘பிக் பாஸ்’ ஹரிஷ்

சிம்புவைச் சந்தித்த ‘பிக் பாஸ்’ ஹரிஷ்

‘பிக் பாஸ்’ போட்டியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், சிம்புவைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.



 
விஜய் டிவியில் ஒளிபரப்பான  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்து கொண்டார். ஓவியாவைப் போல அவரும் மனதுக்குப் பட்டதை வெளிப்படையாகப் பேசியதால், எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. ‘பிக் பாஸ்’ வீட்டின் செல்லக்குட்டி என்றே அவரை அழைத்தனர்.‘பிக் பாஸ்’ அவரை சிம்புவாக நடிக்கச் சொல்லி டாஸ்க் கொடுத்தார். அந்த டாஸ்க்கில் சிம்பு போலவே அருமையாக நடித்துக் காட்டினார் ஹரிஷ் கல்யாண். நயன்தாராவாக நடித்த பிந்து மாதவி தோள் மீது அவர் கைபோட்டு செய்த சேட்டைகள், ரசிக்கும்படி இருந்தன.




 

‘பிக் பாஸ்’ முடிந்து வீடு திரும்பிய ஹரிஷ், சிம்புவை சந்தித்துள்ளார். அவருக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்துள்ள சிம்பு, ‘எங்கிருந்து தொடங்கினாய் என்பதை மட்டும் எப்போதும் மறக்காதே’ என ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளார். அந்தப் புத்தகத்தை போட்டு எழுத்து மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.