இன்ஸ்டாகிராமில் சிம்பு செய்த சாதனை!
நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹிட்டே கொடுக்கவில்லை என்றாலும் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான ஈஸ்வரன் கூட பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சமூகவலைதளங்களிலும் சிம்புவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதையடுத்து சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் சிம்பு. அதில் தன் புகைப்படங்களை அவர் பதிவேற்றி வந்த நிலையில் இப்போது அவரை 10 லட்சம் பேர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். குறுகிய காலத்தில் சிம்பு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.