Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உங்க மூஞ்சியெல்லாம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு அசிங்கம்: சித்தார்த்தை கலாய்த்த ரசிகர்

Last Modified ஞாயிறு, 7 ஜனவரி 2018 (22:45 IST)
நடிகர் சித்தார்த நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்கள் வெளியானதால் வேறு வழியின்றி தூக்கப்பட்டது.

இந்த நிலையில் சித்தார்த் தனது டுவிட்டரில் திரையரங்குகளில் இருந்து 'அவள்' தூக்கப்பட்டுவிட்டதால் யாரும் கவலைப்பட வேண்டாம். நெட்ஃபிளிக்ஸ் இருக்கின்றது. உலகம் முழுவதும் உள்ளவர்கள் அதன் மூலம் பார்க்கலாம் என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதற்கு ஒரு ரசிகர், தமிழ் ராக்கர்ஸ் எங்களை கைவிட்டது இல்லை' என்று பதிலளித்து கலாய்த்திருந்தார்.. இதனால் வெறுத்து போன சித்தார்த், 'உங்க மூஞ்சியெல்லாம் ஏங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்குத்தான் அசிங்கம்' என்று சொல்லுங்கள் நன்றி' என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :