வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2017 (14:07 IST)

2ஜி வழக்கு தீர்ப்பால் ஏமாற்றம் : நடிகர் சித்தார்த் போட்ட சர்ச்சை டிவிட்

2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் நடிகர் சித்தார்த் பதிவு செய்த டிவிட் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.


 
இந்நிலையில், இந்த தீர்ப்பு வெளிவாதற்கு முன் நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “ ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 இன்று விமர்சனம். உங்களுக்கு வாழ்த்துக்கள். ஜெயலலிதா, சசிகலா நடிப்பால் உருவான திருட்டுப்பயலே-2 படம்போல உங்களுக்கான தீர்ப்பும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.  தமிழண்டா” என பதிவு செய்திருந்தார்.


 













ஆனால், தீர்ப்பு வேறு மாதிரி இருந்ததால், ஏமாற்றமடைந்த சித்தார்த், பழைய டிவிட்டை நீக்கி விட்டு “சூப்பர் ஹிட் ரிப்போர்ட். அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. தூய்மையான இந்திய அரசியலுக்கு என் வாழ்த்துக்கள். எவ்வளவு நல்ல விஷயம். இனி 2ஜி கிடையாது. தேசிய கீதத்திற்கு எழுந்து நில்லுங்கள்” என கோபமாக டிவிட் செய்துள்ளார்.