திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (10:55 IST)

உங்கள் கணவரைக் கூட கேலி செய்ய அனுமதிக்காதீர்கள் – நடிகரின் மனைவி அறிவுரை!

நடிகர் நகுலின் மனைவியும் தொகுப்பாளருமான ஸ்ருதி பாஸ்கர் பிரசவமான பெண்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில்  நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

இந்நிலையில் இப்போது ஸ்ருதி பிரசவத்துக்கு பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றம் உடல் எடை கூடுதல்  மற்றும் பிரசவகால தழும்புகள் ஆகியவைப் பற்றி ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் உருவத்தைக் கேலி செய்ய உங்கள் கணவரைக் கூட அனுமதிக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.