சிலிண்டர் தூக்கி உடற்பயிற்சி செய்யும் ஷிவானி …வைரல் வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒவ்வொரு வீடியோவும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்று போட்டோ ஷூட்டுகளையும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.
இந்நிலையில் இன்று தனது வீட்டில் சிலிண்டர் எடுத்து உடற்பயி்ற்சி செய்வது போன்ற வீடியோ பதிவிடுள்ளார். இது வைரலாகி வருகிறது.
அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.