திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (15:44 IST)

சூரரைப் போற்று இந்தியில் டப்பிங்… அப்செட்டான ஹீரோ!

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்கும் முடிவில் இருந்தார் நடிகர் ஷாகித் கபூர்.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஆர்வமாக இருந்தனர். இந்தியில் நடிகர் ஷாகித் கபூர் இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விருப்பப்பட்டார். ஆனால் இப்போது அமேசான் தளத்திலேயே இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலிஸாவதால் அவர் அப்செட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.