1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:46 IST)

குடும்பத்தின் பிரைவசிக்கு மதிப்பு கொடுங்கள்… ஷில்பா ஷெட்டி வேண்டுகோள்!

கணவர் சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது சம்மந்தமாக கருத்து சொல்வது சரியானது அல்ல என ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

ஆபாசபட விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஷில்பா ஷெட்டி இடம் சமீபத்தில் போலீசார் விசாரணை செய்தனர். ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் ஷில்பாவுக்க்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர் தனது கணவர் ராஜ் குந்த்ராவை கடுமையாக தாக்கியதாக போலீஸ் அதிகாரியின் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஷில்பா ஷெட்டி இந்த விவகாரத்தில் தன்னை தவறாக சித்தரித்ததாக 29 பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று தனது சமூகவலைதளத்தில் ஷில்பா ஷெட்டி ‘ ஊடகங்களாலும் என் நலம் விரும்பிகளாலும் கடந்த சில நாட்களாக நான் எல்லா முனைகளில் இருந்தும் தாக்கப்பட்டேன். இந்த கேலிகள் மற்றும் குற்றச்சாட்டுகள் எல்லாம் என்னைத் தாண்டி என் குடும்பத்தையும் பாதிக்கின்றன. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் கருத்து தெரிவிப்பதும் முறையாக இருக்காது என்பதால் எதையும் நான் கூறப்போவதில்லை. எங்கள் முன் இருக்கும் அனைத்து சட்டபூர்வ வழிகளையும் தற்போது முயற்சி செய்துவருகிறோம். எங்கள் குழந்தைகளுக்காகவாவது எங்களின் பிரைவசியை மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.