வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (14:49 IST)

ரூ.25 கோடி நஷ்ட ஈடு: ஷில்பா ஷெட்டி ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு

ஊடகங்கள் மீது ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
ராஜ் குந்த்ராவின் விவகாரத்தில் ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் சில ஊடகங்கள் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி. அதில், என் பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான செய்திகள் வெளியாகியுள்ளன. என்னை பற்றி தவறான செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 
 
மேலும் என்னை பற்றிய தவறான செய்திகளை அகற்றுவதுடன் ரூ. 25 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும். அந்த குற்றம் மற்றும் விசாரணையில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகளால் என் பெயர், கேரக்டர் பாதிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.