வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 28 ஜூன் 2021 (11:29 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு டுவிட்டரில் நன்றி கூறிய ஷங்கர்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு ஷங்கர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார் 
 
முதல்வர் அவர்களின் வருகையும் அவருடைய மணமக்களுக்கு அவருடைய ஆசிர்வாதமும் மிகப் பெரிய வரம் என்றும் அவரது வருகையை எங்களால் மறக்கவே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வருடன் வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் உதயநிதி எம்எல்ஏ அவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் 
 
ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் பிரபல தொழிலதிபர் மகன் ரோகித் என்பவருக்கும் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் சுமார் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது