வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 ஜூன் 2021 (14:14 IST)

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின்: மணமக்களை வாழ்த்தினார்!

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இன்று நடைபெற்றது 
 
இந்த திருமணத்தில் முக்கிய நபர்கள் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த திருமணத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். அவர் மணமக்களை வாழ்த்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இயக்குனர் ஷங்கரின் மகளை மதுரையை சேர்ந்த தொழிலதிபர் தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித் என்பவர் என்று திருமணம் செய்கிறார். இவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் புதுவை கிரிக்கெட் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு முடிந்தவுடன் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது