சமந்தாவா இது… டீனேஜ் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை சகுந்தலம் எனும் பெயரில் உருவாக்கினார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் தேவ் மோகன் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூலையே பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான சமந்தாவின் யசோதா திரைப்படமும் வெற்றியைப் பெறவில்லை.
ஆனாலும் சமூக வலைதளங்களில் சமந்தாவுக்கு இன்னமும் கிரேஸ் குறையவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் தன்னுடைய டீனெஜ் புகைப்படத்தைப் பகிர, அது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.