திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2021 (19:16 IST)

சூர்யாவின் சூரரைப் போற்று படம் மிகப்பெரும் சாதனை !

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்று தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகள் நேற்று அமேசன் பிரைமில் வெளியானது.

இந்நிலையில் சூரரைப் போற்று படம் தற்போது ஒரு சாதனை படைத்துள்ளது அதாவது, அமேசான் பிரைமில் வெளியான பிராந்திய மொழித் திரைப்படங்களிலேயே அதிகம்பேரால் பார்க்கப்பட்ட ஒரே படம் சூரரைப் போற்று என்ற சாதனையைப் படைத்துள்ளது .இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.