1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (16:55 IST)

இன்றைய திரைப்படங்களைப் பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்கள்… அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இன்றைய திரைப்படங்களைப் பார்த்தால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எல்லோரும் தைரியமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பேசுவது எதாவது சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டு உள்ளது. அதில் முக்கியமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. தர்மாக்கோல் ராஜு என அழைக்க்ப்படும் இவர் இன்று இன்றைய சினிமாக்களை பற்றி பேசியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘இப்போதி வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள். அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவானார்கள்.’ எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.