புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 26 செப்டம்பர் 2020 (16:55 IST)

குழந்தையின்மைக்காக ஜிம் சென்ற மனைவி… அங்கே உருவான காதல் – காவல்நிலையத்தில் கணவர் புகார்!

மதுரை அருகே ஜிம் ஓனரோடு சென்றுவிட்ட மனைவியை மீட்டுத்தருமாறு கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராஜேஷ் மற்றும் கனிமொழி. ராஜேஷ் விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகி தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது கனிமொழிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததாகவும், அதைக் கரைக்க உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் படியும் மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

இதனால் கனிமொழி மதுரை வில்லாபுரத்தில் உள்ள யோகேஷ் கண்ணா என்பவரின் ஜிம்மில் கனிமொழி சேர்ந்துள்ளார். அங்கே சேர்ந்த சில மாதங்களிலேயே கனிமொழிக்கு யோகேஷ் கண்ணாவுடன் பழக்கம் உருவாகி அது காதலாகியுள்ளது. இதையறிந்த ராஜேஷ் கண்டிக்க, இப்போது காதலர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.