வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (12:55 IST)

பிரபுதேவாவுடன் சாயிஷா காதல்?

நடனத்தில் மட்டுமல்ல, காதலிலும் மன்னனாக வலம் வருகிறார் பிரபுதேவா. இவர் தனது மனைவியை விவாகரத்து செய்த பின்பு நயன்தாராவை காதலித்தார். இருவருக்கும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்ட நிலையில் திருமணம் திடீரென ரத்தானது. 

 
அதன் பின்னர் இந்தி நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். இப்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சாயிஷாவுடன் இணைத்து  பேசப்படுகிறார். பிரபுதேவாவைப்போல் சாயிஷாவும் நடனத்தில் வல்லவர். இவர் ஜெயம் ரவியுடன் வனமகன், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யா ஜோடியாக கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சூர்யாவுடனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி  உள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி, சாயிஷா ஆகியோர் நடிக்க ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படம் தயாராவதாக இருந்தது. ஆனால் படவேலைகள் இன்னும் தொடங்கவில்லை. 
 
அந்த படம் நின்று போனதாகவும் பேசப்படுகிறது. அந்த பட அறிவிப்புக்கு பிறகு பிரபுதேவா–சாயிஷா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் நெருங்கி பழகுவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது. 

 
இரு தினங்களுக்கு முன்பு சாயிஷா சென்னையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பிரபுதேவா நேரில் சென்று வாழ்த்தினார். நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவை வாழ்த்த வந்ததை வைத்து இந்த கிசுகிசுக்கள் வலம் வருகின்றன..