பிரபுதேவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி பட வில்லன்

Last Updated: திங்கள், 9 ஜூலை 2018 (22:05 IST)
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா போலீசாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பாகுபலி பட வில்லன் பிரபாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி படத்தில் வில்லனாக காலகேயர் தலைவன் இன்கோசி ரோலில் நடித்த பிரபாகர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் பிரபாகர் வில்லனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த  படத்தில் பிரபுதேவாக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜும், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
 
கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவில், டி.இமான் இசையமைக்கிறார். ஜபக் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இன்னும்  பெயரிடப்படவில்லை. 


இதில் மேலும் படிக்கவும் :