வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:32 IST)

ரஜினி, கமலுக்கு வேட்டு வைக்கும் சத்யராஜ்

அரசியல் படம் மூலம் ரஜினி, கமலுக்கு வேட்டு வைக்க இருக்கிறார் சத்யராஜ்.
 
சத்யராஜ் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் விஜய்யின் ‘மெர்சல்’. அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். அதில், ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற படம் ரிலீஸுக்குத் தயாராகியுள்ளது. ‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் கே.எம். இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், கிஷோர், யோகிபாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
அதைத் தொடர்ந்து, ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஷிவராஜ் இயக்கும் இந்தப் படத்தை, சுந்தரி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கதை மற்றும் வசனங்களை இயக்குநர் செல்வபாரதி எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.