வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:38 IST)

சுபமண்யபுரம் பார்ட் 2 வராது… ஆனா அந்த சீரிஸ் வரும்- இயக்குனர் சசிகுமார் தகவல்!

2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது.

படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைப்பதையயடுத்து படக்குழுவினர் ஒன்றினைந்து கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது இயக்குனர் சசிகுமாரிடம் சுப்ரமணியபுரம் பார்ட் 2 பற்றி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் சுப்ரமணியபுரம் 2 வராது எனக் கூறியுள்ளார்.

மேலும் தற்போது குற்றப்பரம்பரை 2 சீரிஸ் இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் “செப்டம்பர் மாதத்தில் குற்றப்பரம்பரை ஷூட்டிங் தொடங்கும். சுப்ரமண்யபுரம் கூட்டணியில் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு ஒரு படம் உருவாக்கும் யோசனை உள்ளது” எனக் கூறியுள்ளார்.