செவ்வாய், 9 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:30 IST)

36 தியேட்டர்களில் இன்று ரி ரிலீஸ் ஆகும் சுப்ரம்ண்யபுரம்! சசிகுமார் அறிவிப்பு!

2008 ஆம் ஜூலை 4 ஆம் தேதி சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரிலீஸானது. பெரிய நடிகர்கள், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ரிலீஸான அந்த திரைப்படம், அதன் திரைக்கதை மற்றும் உருவாக்கம் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சனப்பூர்வமாக பாராட்டுகளக் குவித்து ஒரு Cult திரைப்படமாக இப்போது வரை கொண்டாடப்படுகிறது.

படத்தில் சசிகுமார், ஜெய், ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்டவர்கள் நடிக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.

ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்போது சுப்ரமண்யபுரம் திரைப்படம் ரி ரிலீஸ் ஆகிறது. இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 36 திரையரங்குகளில் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.