1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (16:45 IST)

புகழேந்தியை நீக்கியது ஆச்சர்யமாக உள்ளது… சசிகலாவின் மற்றொரு ஆடியோ!

சசிகலாவோடு பேசியதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடந்த நிலையில் எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் நுழைந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சார்பில் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தியைக் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதற்குக் காரணம் அவர் சசிகலாவோடு பேசியதுதான் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சசிகலா அதிமுகவைச் சேர்ந்த பாரதி என்பவரோடு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ‘புகழேந்தி கட்சிக்காக உழைத்தவர்.  அவரை நீக்கியது ஆச்சர்யமாக உள்ளது. கட்சியை சரி செய்துகொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் நான் வருவேன்’ என்று அந்த உரையாடலில் பேசியுள்ளார்.