1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (15:38 IST)

ஹரி நாடார் மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு!

ஏற்கனவே பணமோசடி வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ஹரிநாடார் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் வைக்கப்பட்டுள்ளது.

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார். இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சுயேட்சைகளில் அதிகவாக்குகள் பெற்ற வேட்பாளர் என்ற சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், ரூ. 16 கோடி மோசடி வழக்கிலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவ் வும் கேளரா மாநிலம் கோவளத்தில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் அவரை விசாரணைக்காக பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர்.

இப்போது சிறையில் விசாரணையில் இருக்கும் அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் எழுந்துள்ளது. கேரளாவில் உள்ள தொழிலதிபர்களுக்கு 100 கோடி ரூபாய் கடன் வாங்கித்தருவதாக 1.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இஸ்மாயில் மற்றும் பஷீர் ஆகிய இருவர் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.