Widgets Magazine

கர்நாடகாவில் சாதனை படைத்த தளபதி: மாஸ் காட்டும் சர்கார்!

Last Updated: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (19:00 IST)
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி நடைப்பெற்றது. 

இந்த விழாவில் பேசிய விஜய்யின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அதோடு இதில் அரசியல் சம்பந்தமான படமாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு வெளியாக உள்ள ‘சர்கார்’ திரைப்படத்தின் கர்நாடகா திரைப்பட விநியோக உரிமை ரூ.8 கோடிக்கு விற்பனையாகி அதிரடியான ஆரம்பத்தை கொடுத்துள்ளது. 
 
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை ரஜினிகாந் நடித்த கபாலி, தல அஜித்தின் வேதாளம் மற்றும் விகரம் நடிப்பில் வெளிவந்த ஐ ஆகிய படங்கள் மட்டுமே விநியோக உரிமையில் சாதனை படைத்தது.

இந்த நிலையில், இப்போது தளபதியின் சர்கார் படமும் விநியோக உரிமையில் சாதனை படைத்துள்ளது. கர்நாடகாவில் சர்கார் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ கோகுல் பிலிம்ஸ் என்ற நிறுவனம் ரூ.8 கோடிக்கு வாங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :