செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (16:31 IST)

ரூ 10 கோடி கொடுத்து நடிக்க அழைத்த பிரபலம் - தூக்கியெறிந்த நயன்தாரா! அப்படி யார் அவர்?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்ககளை தேர்வு செய்து நடித்து சூப்பர் ஹிட் அடிப்பார். தற்போதைய நடிகைகளே ரோல் மாடலாக நினைப்பது நயன்தாராவை தான் அந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு நிகராக தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார்.


 
தென்னிந்திய சினிமாவே தூக்கிவைத்து கொண்டாடும் நயன்தாராவை,  தங்கள் படங்களில் நடிக்க வைக்க பெரிய இயக்குனர்களே போட்டிப்போட்டு முந்தியடித்து கொள்வார்கள். அப்படியிருக்க இவருடன் நடிக்கவேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் வராது. ஆம், நயன்தாராவுடன் நடிக்க சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் சினிமாவில் எண்ட்ரீ கொடுக்கவுள்ளாராம். அவரை தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட பார்த்திருப்பீர்கள். அதுவும் முதல் படத்திலேயே நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என அடம் பிடித்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் நயனுடன் எப்படியாவது நடிக்கவேண்டுமென்பதற்காக அவர் ரூ 10 கோடி நயன்தாராவிடம் கொடுத்ததும் நயன் நடிக்கவே முடியாது என்று கூறி மறுத்துவிட்டராம். இருந்தும்  இந்த தகவல் நிரூபிக்கப்படாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.