வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (11:25 IST)

சாதனை படைக்குமா பிகில்? "ரசிகர்கள் போட்ட மாஸ்டர் பிளான்"!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'பிகில்' படத்திற்காக இணைந்துள்ளார். 


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார்.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான  பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில்  படத்தின் அப்டேட்டுகள்  வந்தவனமாகவே இருக்கிறது. அந்தவகையில் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் படுமும்முரமாக நடந்து வருகிறது, இன்னொரு பக்கம் பட புரொமோஷன் விஷயங்களில் தயாரிப்பு குழு பிஸியாக உள்ளனர். 


 
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் "சிங்கப்பெண்ணே" என்ற  பாடல் இன்று வெளியாக இருக்கிறது. ஆனால் எத்தனை மணிக்கு ரிலீஸ் என்பது தெரியவில்லை, இருந்தும் ரசிகர்கள் படு தயாராக இருக்கின்றனர். இப்பாடலை டிரண்டாக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் பிளான் போட்டு வருகின்றனர். அதனை நீங்களே பாருங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறி சாதனை படைக்குமா பிகில் சிங்கிள் ட்ராக் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.