வடசென்னை அப்டேட் - ஏரியா குத்து: சந்தோஷ் நாராயணன் டிவிட்!

Last Updated: திங்கள், 2 ஜூலை 2018 (21:34 IST)
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் வடசென்னை. இந்த படம் பலரது கனவு படமாக உள்ளது. மூன்று பாகங்களாக இப்படம் வெளியாக உள்ளது. 
 
இந்நிலையில், முதல் பாகம் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. படத்தின் டிரைலர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 28 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதபாத்திரங்களில் அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிகிறது. 
 
இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணம் படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்டை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளது பின்வருமாறு, வடசென்னை படத்திற்கு இசையமைத்து முடித்துவிட்டேன். வெற்றிமாறனின் இந்த பிரம்மாண்ட படைப்பில் நானும் ஒருவனாக இருப்பதை கவுரவமாக நினைக்கிறேன். 
 
படத்திற்காக கடுமையாக உழைத்த நடிகர் தனுஷுக்கு வாழ்த்துக்கள். துடிப்பும், வேடிக்கையும் அடங்கிய ”ஏரியா குத்து” பாடல்களுடன் திரும்ப வருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :