திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 28 ஜூன் 2018 (20:43 IST)

நடிகையுடன் டூயட் பாடக் காத்திருக்கும் தனுஷ்

நடிகை எப்போது திரும்பி வருவார், அவருடன் டூயட் பாடலாம் எனக் காத்திருக்கிறார் தனுஷ்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘மாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ‘பிரேமம்’ சாய் பல்லவி ஹீரோயினாக  நடிக்கிறார். மேலும், வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த சில நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. கடைசியாக, சண்டைக்காட்சியுடன் முடிந்திருக்கிறது. இந்நிலையில், ஒரு பாடல் மட்டும் பாக்கியிருக்கிறது. சாய் பல்லவி தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால், அவர் திரும்பி  வந்ததும் இந்தப் பாடலை எடுக்க இருக்கின்றனர்.