ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (19:30 IST)

சாண்டியின் ‘3:33’ போஸ்டரை வெளியிடும் பிரபல இயக்குனர்!

சாண்டியின் ‘3:33’ போஸ்டரை வெளியிடும் பிரபல இயக்குனர்!
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடன இயக்குனருமான சாண்டி சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் 13
 
‘3:33’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த செகண்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் காணப்பட்ட கடிகாரத்தின் பின்னணியில் இருந்து இந்த படம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் என்பவர் இசையில் உருவாகும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.