1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (19:55 IST)

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ அட்டகாசமான சிங்கிள் பாடல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் ரெண்டு காதல் என்ற சிங்கிள் பாடல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
அதன்படி சற்று முன்னர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு காதல் என்ற சிங்கிள் பாடலை வெளியிட்டு உள்ளார். எல்லோருக்கும் ஒரு காதல் தான் ஆனால் எனக்கு இரண்டு காதல், ஒரு காதல் தோல்வி அடைந்தாலே தாங்க முடியாது எனக்கு இரண்டும் தோல்வியடைந்துள்ளது என்ற முன்னுரையுடன் இந்த பாடல் தொடங்குகிறது 
 
அனிருத் இசையில் அட்டகாசமாக உருவாகிய இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலை அனிருத், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது