வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (17:04 IST)

பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி...

பார்த்திபன் இயக்கும் ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தில், சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார்.

 
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்க இருக்கும் படம் ‘உள்ளே வெளியே 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராக இருக்கிறது. 
 
பொதுவாக, பார்த்திபன் இயக்கும் படங்களில் அவரே தான் ஹீரோவாக நடிப்பார். ஆனால், இந்தமுறை வித்தியாசமாக சமுத்திரக்கனியை ஹீரோவாக நடிக்கவைக்க இருக்கிறார்.
 
‘ஆடுகளம்’ கிஷோர், மம்தா மோகன்தாஸ், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர். அத்துடன், பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 
 
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் பார்த்திபன்.