செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:17 IST)

நண்பர்களோடு சைக்கிள் ரைடு சென்று ஜாலி பண்ணும் சமந்தா - வீடியோ!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென விவகாரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. காரணம் சமந்தா மோசமான படுக்கை காட்சிகளில் நடிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளனர். 
 
இது ஒரு பக்கம் சினிமா ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நேரத்தில் சமந்தா அதை பற்றி எந்தவித டென்க்ஷனும் இல்லாமல் கூலாக நண்பர்ளுடன் சேர்ந்து சைக்கிள் ரைடு சென்ற வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ், கமென்ஸ் அள்ளியுள்ளார்.