1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2024 (10:11 IST)

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சமீபத்தில் ரிலீஸான விடுதலை 2 படத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “நான் சூர்யா சார் நடிக்கும் வாடிவாசல் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.