1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (10:03 IST)

இந்திக்குப் போகும் கைதி – டில்லி ஆகும் சல்மான் கான் ?

கார்த்தி

தமிழில் பெருவெற்றி பெற்ற படமான கைதி இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில் அதில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் படத்துடன் வெளிவந்த திரைப்படம் கைதி. பிகில் படம் வசூலில் சாதனை செய்தாலும் கைதி படமே அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக அமைந்தது. பாடல்கள் இல்லாத போதும் அற்புதமான திரைக்கதையால் படம் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கைதி திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க அதிகாரபூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  அதற்காக இந்தி தயாரிப்பு நிறுவனமான ரிலையன்ஸோடு கைகோர்த்துள்ளார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் இந்த படத்தில் சல்மான் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.