1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (11:29 IST)

4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ள சாய் பல்லவி

‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி, 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.


 
‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக தமிழ் மற்றும் கேரள இளைஞர்களை வசீகரித்தவர் சாய் பல்லவி. தற்போது விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் சாய் பல்லவி. அம்மாவுக்கும், அந்தக் குழந்தைக்குமான பாசப்பிணைப்புதான் கதை.

“சாய் பல்லவி நடித்த ‘பிரேமம்’ மற்றும் ‘களி’ இரண்டு படங்களையும் பார்த்தபிறகு, நிச்சயம் இவரால் இந்தக் கேரக்டரில் நடிக்க முடியும் என்று நம்பினேன். அதுபோலவே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி” என்று பாராட்டுகிறார் விஜய். இந்தப் படத்துக்கு, தானே டப்பிங் பேசியிருக்கிறார் சாய் பல்லவி. முக்கியமான விஷயம், இந்தப் படம் கருக்கலைப்பு பற்றி விரிவாகப் பேசும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.