விஜய் பட பாடகருக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்
சினிமாவில் உள்ள மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவர் சங்கர் மகாதேவன். இவர் இன்று தனது 53 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்னணிப் பாடகாராக இருப்பவர் சங்கர் மகாதேவன்.,
அவர் எந்தப் பாடல் கொடுத்தாலும் அதை 20 நிமிடத்தில் பாடிமுடிக்கும் ஆற்றல் உள்ளவர். மேலும் இந்திப் படங்களில் அவர் சிறந்த இசையமைபபளராக உள்ளார்.
விஜய் நடித்த திருமலை படத்தில் வித்யாசாகர் இசையில் வரும் நீ என்பது எதுவரை எதுவரை என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி அசத்தியிருப்பார். அதேபோல் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இன்றும் பாடி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் தனது 53 வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உங்களுன் ஆத்மார்த்தமான உயிரோட்டமான குரலால் இளம் தலைமுறையினருக்கு உற்சாகம் ஊட்டுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.