நேர்கொண்ட பார்வையோடு மோதும் சாஹோ

ajith
Last Modified வியாழன், 13 ஜூன் 2019 (16:02 IST)
நெடுநாளாக அஜித் ரசிகர்கள் ஆர்வமாய் காத்திருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணியளவில் ரிலீஸ் ஆனது. அந்த பரபரப்பின் இடையே சத்தமேயில்லாமல் வெளியாகியிருக்கிறது பிரபாஸ் நடிக்கும் சாஹோ திரைப்படத்தின் டீஸர்.

தல அஜித் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. சதுரங்க வேட்டை, தீரன் திரைப்படங்களை இயக்கிய வினோத் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. இன்னமும் 24 மணி நேரம் கூடாத தாண்டாத நிலையில் ட்ரெய்லர் 60 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபாஸ் நடித்துள்ள ’சாஹோ’ திரைப்படத்தின் டீசரும் நேற்று வெளியாகியுள்ளது. ஷ்ரதா கபூர், பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்கியுள்ளார். இதன் டிரைலர் பரவலான கவனத்தை பெற்றாலும் அதிக பார்வையாளர்களை பெறவில்லை.

இரண்டு திரைப்படங்களின் ரிலீஸும் கிட்டதட்ட அருகருகே இருக்கின்றன. நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10ம் தேதியும், சாஹோ ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றும் வெளியாகின்றன. பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தவர் பிரபாஸ் என்பதால் இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் போட்டி போட்டு கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :