வெறித்தனம்... வொர்த்... ரசிகர்கள் கொண்டாடும் சாஹோ பட டீசர் இதோ...!!

Last Updated: வியாழன், 13 ஜூன் 2019 (13:37 IST)
நடிகர் பிரபாஸ் பாலிவுட் நடிகை ஷராதா கபூர் ஆகியோர் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாஹோ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 
 
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த படம் சாஹோ. 
 
தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆம் வரும் சுதந்திர தின விருந்தாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் சுஜீத் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் தர்போது வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
டீசரை பார்த்த ரசிகள் பலர் சண்டை காட்சிகள் ஹாலிவுட் படங்கள் ரேஞ்சுக்கு உள்ளது எனவும் பாலிவுட் படங்கள் தோற்றுப்போகும் எனவும் கூறி டீசரை கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த டீசர்...
 


இதில் மேலும் படிக்கவும் :