ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (23:05 IST)

'ருத்ரன் 'பட 2 வது சிங்கில் 'பகைமுடி' ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

rudhran
ருத்ரன் படத்தின் 2வது பாடலான பகைமுடி பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் மிகச்சிறந்த டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் ருத்ரன். இப்படத்தை இயக்குனர் கதிரேசன் இயக்குகிறார்.

இப்படத்தில்,  நடிகர் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

முனி, காஞ்சனா, ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிவரும்னி நிலையில், இப்படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் 2வது பாடலான பகைமுடி பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், இப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.